போரூரில் வீற்றிருக்கும் ராம நாதேஸ்வரர் கோவில், குருவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. மூலவர் பெயரானது ராமநாதேஸ்வரர் என்பதாகும். அம்பிகையின் பெயரானது சிவகாம சுந்தரி. சிவபெருமானை குருவாக பாவித்து, ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால், குரு தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.
சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விசேஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.