ரஞ்சன் ராமநாயக்கவின் ஆடையை வார்த்தைகளால் துயிலுரிந்த நாமல் எம்.பி!!

மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விவாதங்கள் நடைபெற்றன.

அங்கு அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் எலோசியஸ் ஆகியோரை கைது செய்வதற்கு யோசனை முன் வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அங்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,

“எங்கள் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர், திருடர்களை பிடிக்கும் அமைச்சர், அமைச்சரே மன்னித்து விடுங்கள், அர்ஜுன் மகேந்திரனையும், அர்ஜுன் எலோசியசையும் கைது செய்யுமாறு அமைச்சரே பரிந்துரை செய்யுங்கள்.

தாங்கள் மெரியட் ஹோட்டலில் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள், அது ராஜபக்சர்களின் ஹோட்டல் என்று கூறினீர்கள். அதனால் தங்களுடன் கதைப்பதில் பயனில்லை. உங்கள் தலைவர்கள் உங்கள் ஆடையை தற்போது கழட்டிவிட்டார்கள்…” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.