நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நேற்றைய தினம் மீண்டும் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டது.
இதன் போது தனது மகளுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆகியவற்றை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை. அவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு விமல் வீரவன்ச பிணை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதன்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள தனது மகளை இலக்கு வைப்பது கவலையளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.







