சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன், இருவர் கைது!!

பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 852 மதுபான போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்தே, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து மதுபான போத்தல்கள் அடங்கிய 21 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.