ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த வேண்டும், அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருவார காலமாக நடைபெற்ற போராட்டம் இறுதியில் திசைமாறி வன்முறையில் முடிந்தது.
சென்னையில் நிலவும் சூழ்நிலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநிர அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டன. பிரிவினை வாத கோஷமும் எழுப்பப்பட்டன. இது பதற்றத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்களும், தேச பிரிவினைக்கு எதிரான போஸ்டர்களும் இடம் பெற்றிருந்தன. மெரீனா கடற்கரையில் அதிக அளவில் இது போன்ற போஸ்டர்கள் இருந்தன. துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுவதை உணர்ந்து ஏராளமானோர் சனிக்கிழமையே விலகினர். மாணவர்கள் போர்வையில் தேச விரோத சக்திகள் ஊடுருவியதே பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்பட்டது. திங்கட்கிழமை பெறும் வன்முறை வெடித்தது. இதற்கு காரணம் மாணவர்கள் போர்வையில் இருந்த சமூக விரோதிகளே காரணம் என்று கூறப்பட்டது.
அமைதியாக நடைபெற்ற போராட்ட களத்தில் பிரிவினை வாதம் ஊடுருவியது எப்படி என்று மத்திய உளவுப்பிரிவு விசாரணை நடத்தியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து மத்திய உளவுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.







