டிரம்ப் ஜனாதிபதி ஆன மறு நாளே கண்ணீர் விட்டு அழுத மனைவி: இளம் பெண் செய்த செயல்!!

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவி ஏற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கான பதவிப்பிரமானம் நடைபெற்றது. அன்று டிரம்ப் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அன்று நடந்த அணி வகுப்புகள் என்ன, அவர் அமெரிக்காவை எப்படி வழி நடத்துவேன் என்று கூறிய வார்த்தைகள் என வெள்ளை மாளிகையே ஒரு கோலகலமாக இருந்தது.

இதில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில் டிரம்ப் மனைவி ஒபாமா மனைவிக்கு பரிசு ஒன்றை கொடுத்தார் அது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் டிரம்ப் குடும்பத்தார் மற்றும் துணை ஜனாதிபதி Mike Pence மற்றும் அவரது மனைவியும் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு தான் ஒரு உணர்ச்சிபூர்வமான சம்பவம் நடந்துள்ளது.

தேவலாயத்தில் இருந்த சபையில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க Marlana VanHoose என்ற பெண் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது டிரம்ப் பாட்டு பாடிய பெண்ணை கூர்மையாக பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனிடையே அருகில் இருந்த மிலானியா டிரம்ப் தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுததும், உடனடியாக கண்ணீல் ஏதோ தூசி பட்டது போல் விரலை கொண்டு கண்ணீரை துடைப்பதும் அந்த தேவாலயத்தில் குழுமி இருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் ஏன் அழுதார் என்ற காரணம் அறிந்த போது பாடல் பாடிய பெண் கண் தெரியாதவர், மேலும் அவரும் வாதம் தொடர்பான நோய் இருந்துள்ளது. இத்தகைய பிரச்சனைகளிலும் ஒரு நீண்ட பாடலை மிக அழகாக பாடுகிறாரே என்ற கோணத்தில் அவர் அழுதிருக்கலாம் என்று கூறப்படுகிறது.