அகதிகளின் உயிர் நாடிகளாக மாறும் காப்பிதிப்பி விறகுகள்!

ஆபிரிக்க சப்-சஹாரா முகாம்களில் வசிக்கும் அகதிகளின் உயிர்நாடியாக மாறும் காலை நேர ஒரு கப் காப்பி எச்ச மிச்சங்கள். இந்த கண்டுபிடிப்பை ரொறொன்ரோ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ளனர்.

மறுசுழற்சி செய்யப்பட்ட காப்பிதிப்பிகளில் இருந்து இந்த மோட்டோவை இவர்கள் உருவாக்கியுள்ளனர். விறகிற்கு ஒரு மாற்றீடாக இது அமைகின்றது.

இதன் அனுமானம் மிகவும் சிறியதாகும். காப்பி திப்பிகளை காயவைத்து அதனுடன் மெழுகு மற்றும் சீனி கலந்து பாண் வேகவைக்கும் அச்சில் போட்டு பேக் செய்து விறகிற்கு பதிலாக உருவாக்கப்படுகின்றது.

ரொறொன்ரோ பல்கலைக்கழக றொத்மன் பாடசாலை MBA மாணவர்களான சாம் பென்னட், லூசி யங் மற்றும் கௌதம் ராமசந்திரன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று இதனை உருவாக்கியுள்ளனர்.

இதன்மூலம் ஆபிரிக்க பெண்களின் விறகு தேவையையும் அதற்காக அலையும் நேரத்தையும் குறைக்க முடியும் எனவும் விறகிற்காக அலையும் நேரத்தை பெண்கள் அவர்களது கல்விக்காக செலவிடலாம் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

காப்பி திப்பிக்கு பற்றாக்குறை ரொறொன்ரோவில் ஏற்படாதென தெரிவித்துள்ளனர். ரிம் ஹொட்டனஸ், ஸ்ராபக்ஸ் மற்றும் செக்கன்ட் கப் ஆகியவர்களிடமிருந்து காப்பிதிப்பிகளை சேகரிக்கின்றனர்.

Moto சமூக நலனிற்கான மிகப்பெரிய ஒர மாணவர் போட்டியின் Hult Prize-ஒரு பகுதியாகும்.ஒரு உலகளாவிய போட்டியாக விளங்கும் இதன் வெற்றியாக சமூக நிறுவனம் ஆரம்பிக்க 1மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரொறொன்ரோ பல்கலைகழக அணி பிராந்திய சுற்றில் மார்ச் மாதம் ஷங்காயில் போட்டிடும்.