இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாகூர் நியமனம்

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அனுராக் தாகூர். லோதா கமிட்டியின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் அமல்படுத்த உத்தரவிட்டது. இதை ஏற்க அனுராக் தாகூர் மறுத்தார். இதனால் உச்சநீதிமன்றம் அனுராக் தாகூரை அதிரடியாக தூக்கியது.

இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகியான நிர்வான் முகர்ஜி மேற்பார்வையில் நடைபெற்றது. மெலும், எம்.பி. குலேரியா, ரத்தன் லால் தாகூர் ஆகியோர் மேற்பார்வையாளராக இருந்தனர். சூரத் சிங் தாகூர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

இதில் அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். வீரேந்தர் கன்வார் சீனியர் துணை தலைவராகவும், ராஜேஷ் பண்டாரி பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.