கோலியிடம் இருந்து கற்று வருகிறோம்: லோகேஷ் ராகுல்

இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அளித்த போட்டி பின்வருமாறு

“விராட் கோலி எங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பல்வேறு சமயங்களில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறார். களத்தில் அவரது ஆர்வத்தையும், எப்படி நிலைத்து நின்று ஆடுகிறார், எந்த அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்துகிறார் என்பதையும் உன்னிப்பாக பார்க்கிறோம். அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்று வருகிறோம்.

தனிப்பட்ட திறமையை மட்டும் பார்க்காமல், அணியை முன்னெடுத்து செல்ல விரும்பும் வீரர்களில் கோலியும் ஒருவர். தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுடன் நிறைய ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவை எல்லாம் மிகச்சிறந்த கேப்டனுக்குரிய அறிகுறியாகும்” என்று கூறினார்.