அதிஷ்ட இலாபச்சீட்டு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஹட்டன் பிரதேச அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த வருடம் முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 30 ரூபாவாக அறவிடப்படும் என அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.
குறித்த முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
10 ரூபாவால் விலை அதிகரிப்பு செய்யப்படுவதனால் எதிர்காலத்தில் அதிஷ்ட இலாப தொழில்துறையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.