மது பிரியர்களுக்கு ஓர் கவலையான செய்தி!!

நாட்டில் கொண்டாடப்படும் விசேட தினங்களில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என இலங்கை மதுவரித்திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய தினங்கள் குறித்த அட்டவணையையும் மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலின் படி கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விசேட தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. போயா தினம்
  2. சுதந்திர தினம்
  3. புத்தாண்டு தினம் மற்றும் அதற்கு முதல் தினம்
  4. ரம்ழான் பண்டிகை
  5. மது ஒழிப்பு தினம்
  6. நத்தார் தினம் என்பனவாகும்.

இதேவேளை, இதில் தைத்திருநாள், மற்றும் தீபாவளி தினங்கள் உள்வாங்கப்படவில்லை.

அத்துடன் அரசாங்கத்தின் குறுகிய கால அவகாசத்தின்படி மேலதிக மதுபானக்கடைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.