எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கும் குறைவாக அரிசியை வழங்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை வேண்டுமென்றே அதிகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.