எண்ணெய், மற்றும் அதனோடு தொடர்புடைய பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் பெருமளவான நாடுகள் எங்களிடம் எண்ணெய் வளங்களை கோரி நிற்கின்றன, ஆனாலும் இலங்கை நாட்டிற்கு எண்ணெய் வளங்களை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவேத் சரிப் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவோடு ஆராய்ந்து வருவதாகவும், அவரும் இவ்விடயத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஈரான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இந்நிலையில் இலங்கையோடு உறவை மேம்படுத்துவது கட்டாயமானது எனவும் தெரிவித்துள்ளார்.