கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர்கள்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் கொழும்பின் இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கும் பொறுப்பு சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது தொடர்பில் அவர் அமெரிக்கா சென்று வந்ததன் பின்னர் தீர்மானிப்பார் என கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.