ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தமை மற்றும் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை என்பன நீக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அன்றைய ஆட்சி முறையை சர்வதேசம் நிராகரித்தன் பிரதிபலனாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டதுடன் மீன் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் காரணமாக அபிவிருத்தியடைந்த சகல நாடுகளும் இலங்கையுடன் கோபித்து கொண்டன.
அபிவிருத்தியடையாத மற்றும் சர்வாதிகார ஆட்சி நடக்கும் சில ஆபிரிக்க நாடுகள் மாத்திரமே இலங்கைக்கு ஆதரவு வழங்கின.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் கட்டியெழுப்பியுள்ள சிறந்த தொடர்புகள் காரணமாக இலங்கை சர்வதேசத்தில் முக்கிய நாடாக முன்னோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.







