பாவம் போக்கும் பசுதானம்!

சிவபெருமான் வசிக்கும் இடம் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோலவே விஷ்ணு இருக்கும் இடம் வைகுண்டம் என்றும், இந்திரன் இருக்கும் இடம் இந்திரலோகம் என்றும், கிருஷ்ணரின் இருப்பிடம் கோலோகம் என்றும் பெயர்பெற்றுள்ளது.

பசுவை தானம் கொடுப்பவர்கள், பல ஆயிரம் வருடங்கள் கோலோகத்தில் கிருஷ்ணபகவானுடன் சேர்ந்திருப்பர் என்று புராணங்கள் கூறுகின்றன. இது தவிர பசுவை தானமாக கொடுப்பவர்களின், 7 தலைமுறையினர் மோட்சத்துக்குச் செல்வார்கள். மேலும் அறியாமல் செய்த பாவங்களும் விலகும்.

கோபூஜை செய்வதால், செல்வச் செழிப்பு உண்டாகும். குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரும்.

முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளும். கோபூஜை செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் கிடைக்கும்.