டோனி சாதனையை எத்தனை கேப்டன்கள் செய்தார்கள் என தெரியாது: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தவர் யுவராஜ் சிங். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். 2013-ல் இருந்து யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்டார்.

தற்போது மூன்று வருடங்களுக்குப்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனி அப்பதவியில் இருந்து விலகினார். டோனியின் கீழ் யுவராஜ் சிங் விளையாடும்போதுதான், இந்தியா இரண்டு உலகக்கோப்பையை வென்றது.

டோனியின் சாதனைக் குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘டோனியின் தலைமையின் கீழ்தான் நாம் டி20 உலகக்கோப்பை, ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் என்ற சாதனைகளை அடைந்துள்ளோம். எத்தனை கேப்டன் இதுபோன்ற சாதனைகளை எட்டியுள்ளனர் என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது’’ என்றார்.