உள்நாட்டு யுத்தம் தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என சிரியா ஜனாதிபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கும் உள்நாட்டு கிளிர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தை முடிவுக்கு க் ஒண்டு வர ஐ.நா சபை, அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் முயன்று வருகின்றன.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வியை முடிவடைந்ததை தொடர்ந்து யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரியா ஜனாதிபதியான அசாத் தனது பதவியை ராஜினாமா செய்தால் தான் இவ்விவகாரம் முடிவுக்கு வரும்’ என அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற ஒரு சூழலில் சிரியா ஜனாதிபதி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், அடுத்த மாதம் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெறவுள்ள அமைதி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தால் தனது பதவியை கூட ராஜினாமா செய்ய தயார் என அறிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக அரசியலமைப்பு தான் முடிவு செய்யும் எனவும் அசாத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







