ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: மக்களை காப்பாற்ற ஜனாதிபதிக்கு மம்தா வேண்டுகோள்!!

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமங்களில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய அரசு தனது தன்னிச்சையான நடவடிக்கைகளால், நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும்போது, அரசியல் சட்ட பாதுகாவலர் என்ற முறையில், ஜனாதிபதிதான் மக்களை காப்பாற்ற வேண்டும். பஞ்சம் வருவதற்கான அறிகுறி தெரிகிறது. மக்கள் உயிர் பிழைக்காவிட்டால், எதுவும் நடக்காது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பொதுமக்களும் கொந்தளிக்க வேண்டும். பூனைக்கு மணி கட்டும் வேலையை திரிணாமுல் காங்கிரஸ் செய்யும்’ என்றார்.