நோபல் பரிசு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நோபல் பரிசு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானி, மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல்,  நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மக்களை ஏழ்மையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இந்தியன் பல்கலைக் கழகத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இதில் இந்தியாவில் பிறந்த குஜராத் மாநிலத்தில் கல்வி அறிவு பெற்ற வெங்கட்ரராமன் கலந்து கொண்டார். ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு வேதியியல் துறையில் விருது பெற்றிருந்தார்.