பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று தான் கருப்பை வாய் புற்றுநோய்.
இந்த கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு, பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண்களின் உயரம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் முடிவில், சாதாரண உயரத்தில் இருந்து 5 செமீ அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு 7% கருப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் உதாரணமாக 165 செமீ உயரம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பு உள்ளது என்றும் 155 செமீ உள்ள பெண்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயரம் அதிகமாக உள்ள பெண்களுக்கு எதனால் கருப்பை புற்றுநோய் தாக்குகின்றது என்பதற்கு உண்மையான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதற்கான சில விளக்கங்கள் உள்ளது.
ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு இன்சுலின் மட்டம் அதிகமாக இருப்பது, அதிக செல்களின் எண்ணிக்கை இவைகள் காரணமாக இருக்கலாம்.
ஏனெனில் இன்சுலின் அளவு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சிகள் தான் மார்பகப் புற்றுநோயை போன்று மற்ற புற்றுநோய்களையும் தீர்மானிக்கிறது என்று கூறுகின்றனர்.







