ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது நீர்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாமல் தனக்கு நெருக்கமானவர்களிடம் நீர் போத்தல் பெற்று தலையில் ஊற்றிக் கொண்டு நீர்தாரை தாக்குதலுக்கு உள்ளானதாக காட்டி அசிங்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் நாமல் ராஜபக்சவினால் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக கேள்விக்கு பதிலளிக்கும் (Q&A session) போது அவரிடம் பலர் பல கேள்விகளை ஒரே நேரத்தில் எழுப்பியிருந்தனர்.
இந்த கேள்விகளின் போது திட்டமிட்ட சிலரினால் கேள்விகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது ஊடககுழு கடுமையாக சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது கேள்விகள்,
வணக்கம் உறுப்பினர் அவர்களே, உங்களுக்கு கோபம் இல்லை என்றால் இவற்றிற்கு பதில் கூறுங்கள்
1. தாங்கள் சட்ட பட்டம் எந்த பல்கலைக்கழகத்தில் பெற்றீர்கள்?
2. அந்த பட்டத்திற்காக தங்களுக்கு படிபித்த பேராசிரியர்கள் ஐவரின் பெயர் குறிப்பிடுங்கள்?
3. அந்த பட்டத்திற்காக தங்களுடன் படித்த ஐவரின் பெயரை குறிப்பிடுங்கள்?
4. தங்கள் இறுதி வருட பரீட்சை எழுதிய பரீட்சை மண்டபம் மற்றும் இலக்கம் என்ன?
5. தங்களின் முதலாவது, இரண்டாவது மற்றும் இறுதி வருட GPAவை குறிப்பிடுங்கள்?
இந்த கேள்விகளை முதலாவதாக அவரது பேஸ்புக் பக்கத்திற்கு நுழைய முடியாத வகையில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு நபரினாலே பதிவிடப்பட்டுள்ள நிலையில் பலர் அந்த கேள்விகளை ஒரே நேரத்தில் அதே முறையில் பதிவிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த நிலைமையுடன் நாமல் ராஜபக்சவினால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை இடையில் நிறுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.