விரைவில் ஜெயிலுக்கு போகும் சசிகலா? அதிமுக கட்சி தீபாவின் வசம் ஆகி விடுமோ!

கடந்த 1991-1995ஆம் காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார்.

அப்போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என அவர் மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்ததாக மன்னார்குடி கோஷ்டிகள் மீதும், திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

18 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2014ல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்பட்டது.

பின்னர் ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மரணடைய, அவரை விட்டு மீதியுள்ள சசிகலா உட்பட நபர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது.

தீர்ப்பு எந்நேரமும் வரலாம் என்றும் அது சசிகலா தரப்புக்கு எதிராக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தீர்ப்பை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறாராம். சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தன் அத்தையின் அதிமுக கட்சி தன்வசம் வந்து விடும் என அவர் நினைக்கிறாராம்.

ஏற்கனவே அதிமுகவின் தொண்டர்கள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.