கேப்டன் பதவியில் டோனியை தவற விட்டோம்: ஜஸ்பிரீத் பும்ரா

இந்திய கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டோனி திடீரென அறிவித்தார்.

இது ரசிகர்களுக்கு பேரும் அதிர்ச்சியை அளித்தது. கேப்டன் பதவியில் அவர் செய்த சாதனைகளை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது:-

டோனி தலைமையின் கீழ் விளையாடியது எப்போதும் பெருமையாக இருக்கும் அவர் அதிக தன்னம்பிக்கை கொடுத்தார். என்னிடம் இருந்த நம்பிக்கையை வெளி கொண்டு வந்தார். இதை மறக்கவே மாட்டேன்.

மைதானத்தில் நான் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் அளித்தார். கேப்டன் பதவியில் டோனி நிறைய தவறவிட்டோம். அவர் எனக்கு அளித்த மதிப்புமிக்க ஆலோசனை எப்போதும் பின் பற்றுவேன்.

வீராட்கோலி தலைமையின் கீழ் நான் விளையாடியதில்லை. அது தற்போது புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

டோனியின் சிறுவயது பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யா கூறுகையில், டோனி சரியான நேரத்தில் முடிவை எடுத்து இருக்கிறார். அவர் நெருக்கடியின்றி விளையாட இந்த முடிவை எடுத்து உள்ளார் என்றார்.