யாழ்.மாவட்ட முதியோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

யாழ். புத்தூர் கிழக்கு ஜெகதாம்பிகா சமேத வேத புரிஸ்வரர் ஆலய நிர்வாகமும், வடமராட்சி ஸ்ரீசத்தியசாயி சமித்தியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை முற்பகல்- 11 மணி முதல் ஸ்ரீ வேத புரிஸ்வரர் ஆலய மண்டப முன்றலில் இடம்பெறவுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னாள் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரியும், மனநல வைத்திய ஆலோசகருமான டாக்டர் ஆர்.சிவசங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்தச் சோதனை, நீரிழிவினை இனங் காண்பதற்கான F.B.S சோதனை, உடல் எடையினை அறிதல் போன்ற பல மருத்துவப் பரிசோதனைகள் இதன் போது இடம்பெறும்.

இந்த மருத்துவ முகாமில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்,பெண் முதியோர்களும் பங்குபற்றலாம் என நிகழ்வின் ஒழுங்கமைப்பாளரான ஊரெழு மனித உரிமைகள் நிலைய இணைப்பாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.

இந்த மருத்துவ முகாம் மாதாமாதம் வரும் முதல் வியாழக்கிழமை பகல்-11 மணி முதல் 01 மணி வரை புத்தூர் வேத புரிஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.