தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்போது அதிமுகவின் பொது செயலாளாரக சசிகலா ஆகியுள்ளார்.
கட்சியின் பெரும் தலைகள் சசிகலாவை எதிர்ப்பார்கள் என பலர் நினைத்துக்கொண்டிருக்க, ஆனால் அவர்களோ சின்னம்மா தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையில் மாவட்டம் தோறும் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க போவதாக சசிகலா அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
கட்சி கிட்டதட்ட சசிகலாவின் ஆளுமைக்கு கீழ் வந்துவிட்டது. இனி அடுத்த அடி முதல்வர் பதவி தான் என்கிறது அதிமுக வட்டாரம்!
ஆனாலும் அடிமட்ட கட்சி தொண்டர்கள், பொது மக்கள் அதிலும் முக்கியமாக பெண்கள் சசிகலா மீது அதிருப்தியாக இருப்பதாக உளவுதுறை அவரிடம் கூறியுள்ளது.
இதையடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்களை கவர, ஜெயலலிதாவே முடிவெடுக்க தயங்கிய மதுவிலக்கை தான் முதல்வரானதும் முதல் கையெழுத்தில் செயல்படுத்த சசிகலா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.