பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட வெ.இண்டீஸ் அணிக்கு அழைப்பு!

இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிக் கொண்டிருக்கும்போது இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியின் காரணமாக ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது.

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் மண்ணிற்கு வருமாறு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு தலைவர் நஜம் சேதி உறுதிப் படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் எங்களுக்கு எதிராக பாகிஸ்தான் அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி பிசிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு பாகிஸ்தான் அந்த கடித்தில் நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்து இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற முன்நிபந்தனையுடன் பதில் கடிதம் அனுப்பியுள்ளத.

நாங்கள் ஒரு திட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இங்கிலாந்து தொடர் மார்ச் 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் மார்ச் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அவர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.