ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே தேசிய அரசின் நோக்கம் : ரணில்

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் இறுதி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது நத்தார் மரத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம் என்றும் கூறியுள்ளார்.