முதல்வர் பதவியை துறக்கிறாரா ஓ.பன்னீர் செல்வம்?

அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்கவிருக்கும் சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அந்த போஸ்டரில் தனது பெயருக்கு கீழே கழக பொருளாளர் என்று மட்டுமே அச்சிட்டுள்ளதால், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை அக்கட்சியின் பொதுச்செயலராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

அதில், புரட்சித்தலைவி வழியில் புதுமைத் தலைவியாய் கழகத்தை வழிநடத்தவரும் மதிப்பிற்குரிய சின்னம்மா என்று தங்களின் வழிதொடரும் ஓ.பன்னீர் செல்வம், கழக பொருளாளர் என அச்சிடப்பட்டுள்ளது.

முதல்வர் என்று குறிப்பிடாமல் கழக பொருளாளர் என்று குறிப்பிட்டுள்ளதால், முதல்வர் பதவியை அவர் துறக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பொதுச்செயலாளர் பதவியை தொடர்ந்து ஜனவரி 12 ஆம் திகதி முதல்வர் பதவியையும் சகிகலா ஏற்கவிருக்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த போஸ்டர் அவரது அனுமதியின் பெயரில் தான் வெளியானது என்பது குறித்த தகவல்கள் இல்லை.