இலங்கைக்கு வரும் அரியவகை வெளிநாட்டு பறவைகள்!

வருடத்தின் இறுதி மாதங்களில் இலங்கையில் அரிய வகை சுற்றுலா பறவைகளை காண முடிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

ரோஸி ஸ்டார்லிங் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவை இனம், அம்பலந்தொட்டை, தெஹிகாலந்த, தம்சிறி கிராம பகுதியில் நிறைந்து காணப்படுகின்றது.

இந்த பறவை இலங்கைக்கு இடம்பெயர்ந்து வரும் பறவை இனமாகும். தெற்கு இந்தியாவில் இருந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்து ஜனவரி மாதத்தில் இருந்து பெப்ரவரி மாதம் வரை இலங்கையில் வசிக்கும் ஒரு பறவை இனமாக இது கருதப்படுகின்றது.

அத்துடன் இந்த பறவை இனம் பொதுவாக குளிரான காலநிலையில் மாத்திரமே இலங்கையில் குறித்த பறவை இனத்தை காண முடியும்.

இளஞ்சிவப்பு நிறத்திற்கு பழக்கம் கொண்டுள்ள இந்த பறவை குளிர்காலத்தின் போது கறுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான உடலிற்கு மாற்றமடையும்.

இந்த பறவைகளின் இனப்பெருக்கம் இலங்கையில் இருந்து செல்லும் காலப்பகுதியில் அல்லது இலங்கைக்கு வருகைத்தந்தவுடன் இடம்பெறும் எனினும், இலங்கையில் அவை முட்டையிடாதென குறிப்பிடப்படுகின்றது.

இந்த பறவை “மைனா” என்ற பறவை இனத்தை சார்ந்ததாகும். உருவமும் மைனாவை போன்றே காணப்படுகின்றது. அத்துடன் ஒரு சில வருடங்கள் 10 ஆயிரம் கணக்கிலான பறவைகள் இலங்கைக்கு வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1996ஆம் ஆண்டில் இந்த பறவைகள் அதிகமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிகளில் இந்த பறவையினைத்தை காண முடிவதாக குறிப்பிடப்படுகின்றது.