கிளிநொச்சியில் பொலிஸாருக்கு மதுபானம் விற்ற பெண்ணுக்கு 10,000 ரூபா அபராதம்!

கிளிநொச்சி நகரில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபான போத்தல்களை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த அரச மதுபான போத்தல்களை பொலிஸாருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த பெண் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.