முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலை குறித்து இலங்கை ஜோதிடர் ஒருவர் ஆரூடம் வெளியிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு மிகவும் தீர்மானமிக்க வருடமாக அடுத்த வருடம் காணப்படும் என ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவுடன் உள்ள பலர் அவரை விட்டு செல்லும் நிலைமை ஒன்று ஏற்படும். இதனால் மஹிந்தவின் மனநிலைமையில் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அவருக்கு ஜனாதிபதி பதவியை இழப்பதற்கு தாக்கம் செலுத்திய கிரக நிலைக்கு சமமான நிலை ஒன்று மே மாதம் வரை செயற்படும் என்பதனால் நண்பர்கள் போன்று அருகில் பிரச்சினைகளை கொண்டு வரும் எதிரிகளிடம் அவதானமாக செயற்படுமாறு அந்த ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது மகன்மார்களின் தவறான செயற்பாடுகளுக்கு தண்டனை வழங்கப்படும் கிரக நிலை ஒன்று உருவாகியுள்ளமையினால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மஹிந்தவின் மனநிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.







