அரிசி மாபியாவின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரரா? பிரதி அமைச்சர்

அரிசி அல்லது நெல் மாபியாவின் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இருக்கக் கூடும் என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரிசி அல்லது நெல் மாபியாவின் பின்னணியில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் செயற்படவில்லை என்பது முழு இலங்கையும் அறிந்த ஒன்று.

மின்சார உற்பத்தியின் போது டீசல் மாபியா காணப்படுவது போன்று நெல்லுக்கும் மாபியா ஒன்று செயற்படுகின்றது.

இதற்கு பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சிலரே பொறுப்பு சொல்ல வேண்டும்.

இவ்வாறான நபர்கள் ஊடகங்களின் ஊடாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.