யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்சின்னங்களின் கண்காட்சியும், தேடல் சஞ்சிகையின் வெளியீட்டு விழாவும் இன்று(29) யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
காலை 09.30 மணியளவில் பல்கலைக் கழகத் தொல்லியல்அருட்காட்சியகத்தில் கண்காட்சி யாழ் யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர்பேராசிரியை வசந்தி அரசரட்ணத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கத்தில் தொல்லியல் ஆய்வு வட்டத் தலைவர் பொ. வருண்ராஜ் தலைமையில் தேடல் இதழ் 02 சஞ்சிகைவெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நூலை யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம்வெளியிட்டு வைக்க முதற்பிரதியை யாழ்.பல்கலைக் கழக வரலாற்றுத் துறை சிரேஷ்டவிரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டஇந்துமதத்தின் தொன்மைச் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆய்வு வட்டத்தால் இரண்டாவது இதழாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று ஆரம்பமான கண்காட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு மன்னார்கட்டுக்கரைக் குளக் கரையில் யாழ்.பல்கலைக் கழகத் தொல்லியல் துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல்வேறு தொன்மைவாய்ந்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த கண்காட்சியில் இந்துமதத்தின் தொன்மைச்சான்றுகள், புராதான காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுடுமண் நாணயங்கள், ஆதி கால, இடைக்கால நாணயங்கள், பெரிய குளத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டசோழர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு, பெண் தெய்வங்களின் உருவங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் சுடுமண் மனித உருவங்கள் பெருங் கற்காலக் கருவிகள், அகத்தியர் கதையைநினைவுபடுத்தும் சிறிய கலசங்கள், சுடுமண்ணாலான மயில் சின்னத்தின் பாகங்கள், பல்வேறு அளவுகளில் அமைந்த சுடுமண் அகல் விளக்குகள், தீபங்கள் உள்ளிட்ட புராதனதொல்லியல் சான்றுப் பொருட்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், தமிழர்களதுதொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும் அமைந்துள்ளன.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கலாசார மத்திய நிலையத்தின் திட்ட முகாமையாளர்லக்ஸ்மன் சந்தான மைத்திரிபால, தொல்லியல் திணைக்களத்தின் யாழ்.கிளிநொச்சி உதவிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க உட்பட யாழ்.பல்கலைக் கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







