மீண்டும் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ஆர் ?

தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக திகழ்பவர் டி. ராஜேந்தர். இந்நிலையில் இவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடப்பது வழக்கம். தற்போது தலைவர் பதவியில் கலைப்புலி எஸ் தாணு, செயலாளராக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் பொறுப்பில் இருக்கின்றனர், இவர்களின் பதவி காலம் மிக விரைவில் முடிவடைவதால் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று பேசப்படுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8ம் தேதி தொடங்கி 12ம் தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13ம் தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.