ஈழத்தமிழர் போண்டா மணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் சினிமாவில் பல காமெடியன்கள் இருக்கிறார்கள். பலரை சிரிக்க வைக்கும் அவர்களின் நிஜ வாழ்க்கையில் சோகமே ஏற்படுகிறது.

அதில் ஒருவர் ஈழத்தமிழரான போண்டா மணி. இலங்கைத் தமிழரான தனக்கு இங்கே வசிப்பது தொடர்பான சில சிக்கல்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் கூற, அவரும் உடனடியாக அவருடைய பிரச்சனையை தீர்த்திருக்கிறார்.

அரசு சார்பாக வீடு ஒன்று வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ஆனால் இது சம்பந்தமாக முதல்வரின் ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முதல்வரிடம் சென்றதால் தன்னுடைய கஷ்டம் தீர்ந்துவிடும் என்று நினைத்த அவருக்கு முதலமைச்சரின் மரணம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.