இருண்ட யுகத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கை!

நாட்டில் தொடர்சியாக வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக எதிர்காலத்தில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதற்கு முகம்கொடுக்கும் வகையிலான பரிந்துரைகளை இலங்கை மின்சார சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடர்ந்தும் நீடித்துள்ள வறட்சியின் காரணமாக பிரதான நீர் தேக்கங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாக சுமார் 500 மெகா வோட்ஸ் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமாக இருந்தால் மின்விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக சுமார் 270 மெகா வேட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 39 வீத மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், விரைவில் திருத்தப்பணிகளை செய்து முடிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.