கரோல் கீதத்துக்கு பதில் ரெப் பாடல்: ஆயர் இல்லம் மன்னிப்பை கோரியது!!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற உலக கிறிஸ்தவ நிகழ்வு ஒன்றின்போது கிறிஸ்மஸ் கரோலுக்கு பதிலாக ஹெய்ல் மெரி என்ற ரெப் பாடல் நூல் ஒன்றில் அச்சிடப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க சபை மன்னிப்பை கோரியுள்ளது.

இது தொடர்பில் ஆயர் இல்லத்தின் பேச்சாளர் எட்மன்ட் திலகரட்ன தமது மன்னிப்பை கோரியுள்ளார். கரோல் கீதத்துக்கு பதிலாக குறித்த நூலில் ஹெய்ல் மெரி என்ற ரெப் பாடல்அச்சிடப்பட்டநிலையில் அந்த நூல் விழாவின் பங்கேற்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது

எனினும் உண்மை தெரியவந்தப்பின்னர் உடனடியாக அந்த நூல்கள் திரும்பப்பெறப்பட்டன.

இதேவேளை குறித்த நூலை இளம் வயதான ஒருவரே அச்சிட்டதாக குறிப்பிட்ட அவர், குறித்த இளைஞர் பிழையான பாடலை பதிவிறக்கம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக தாம் மனம் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.