நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது போகும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் மாத்திரமல்லாது 113 என்ற பொதுவான பெரும்பான்மை பலத்திலும் நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
வடக்கு மாகாண சபையில் இந்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள திருத்தங்களுடன் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டால், மூன்றில் இரண்மு பெரும்பான்மை பலத்தில் அது நிறைவேற்றப்படலாம் என்றும் அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சட்டமூலத்தில் திருத்தங்களை செய்வதாக மாகாண முதலமைச்சர்களிடம் இணங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் அரசாங்கத்திற்கு சவாலான ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது.






