ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து இன்றுகாலை சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது.
காணாமல் போன அந்த விமானத்தில் 81 பயணிகளும், விமானிகள் உள்பட பத்து பேரும் சென்றதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க ஹெலிகாட்பர்கள் மூலம் தீவிர தேடுதல் நடத்தப்பட்டு நிலையில், கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி கடலோர பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக மீட்புப் படையினர் இன்று பிற்பகல் கண்டுபிடித்தனர்.
சிதறி கிடக்கும் பாகங்களை வைத்து அந்த இடத்தை அடையாளம் கண்ட மீட்புக் குழுவினர், விமானத்தில் சென்றவர்களை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







