ஹோட்டல்ஸ்.காம் என்ற நிறுவனம் 2016-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் முதலிடத்தை தலைநகர் டெல்லியும், 2-வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளது. மும்பை, கோவா நகரங்கள் 3,4-வது இடத்தையும் 5,6,7,8 இடங்களை கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், புனே ஆகிய நகரங்களும் பிடித்துள்ளன.
‘கிழக்கு மான்செஸ்டர்’ என்றழைக்கப்படும் அகமதாபாத் 9-வது இடத்தையும், ஆக்ரா 10-வது இடத்தையும் பிடித்துள்ளது. ‘கடவுளின் தேசம்’ என்றழைக்கப்படும் கேரளாவின் கொச்சி நகரம் டாப்- 10 பட்டியலில் இடம்பெறவில்லை.