நாட்டின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எந்த தொந்தரவுகளையும் கொடுப்பதில்லை என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அவரது அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு தொந்தரவுகளையோ இடையூறுகளையோ கொடுக்காது.
கடந்த ராஜபக்ச அரசாங்கம் ஊடகவியலாளர்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்றது.
ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால், எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
எனினும் சில ஊடவியலாளர்கள் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சி எப்படியான தடைகளை ஏற்படுத்தினாலும் 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கத்தை அசைக்க முடியாது என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







