அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது.
அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பறித்துக் கொண்ட அர்ஜென்டினா, தொடர்ந்து அந்த இடத்தில் நீடித்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த பெல்ஜியம் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பிரேசில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஜெர்மனி 3-வது இடத்திலும், பெல்ஜியம் 4-வது இடத்திலும், சிலி ஐந்தாவது இடத்திலும், கொலம்பியா 6-வது இடத்திலும், பிரான்ஸ் 7-வது இடத்திலும், போர்ச்சுக்கல் 8-வது இடத்திலும், உருகுவே 9-வது இடத்திலும், ஸ்பெயின் 10-வது இடத்திலும் உள்ளன.