கோத்தபாயவுக்கு எதிராக களமிங்கும் இடதுசாரிகள்! மகிந்தவுக்கு ஆப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல சிறுகட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

அந்த கடிதத்தை வாசுதேவ நாணயக்கார ஒப்படைத்துள்ள நிலையில், அதற்காக மஹிந்தவுக்கு நெருக்கமான கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள இணைந்துள்ளனர்.

கடந்த ஆட்சியிலும் கோத்தபாய மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவின. அதன் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது சரியான தீர்மானம் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் ஊடாக மீண்டும் இனவாதம் தூண்டப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக கோத்தபாய போன்றோர் ஜனாதிபதி வேட்பாளராகினால் தான் உட்பட இடதுசாரி கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள நேரிடும் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ராஜபக்ஷ குடும்பம் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவும், பிரதமர் வேட்பாளராக மஹிந்தவும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.