வானத்தில் தோன்றிய கிறிஸ்துமஸ் தாத்தா! ஆச்சரிய புகைப்படம்!

பிரித்தானியா நாட்டின் Witham கவுண்டியில் வசித்து வருபவர் Cheryl Holland (63).

தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற இந்த பெண்மணிக்கு ஒரு அதிசய காட்சி வானத்தில் தெரிந்துள்ளது.

இது பற்றி Cheryl கூறுகையில், நான் என் வீட்டின் சமையலறையில் சமையல் செய்வதற்காக சென்றேன்.

அப்போது மூடியிருந்த அறையின் ஜன்னலை திறந்தேன். அப்போது வானத்தின் மேகத்தில் நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆம், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில் மேகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் எனக்கு தெரிந்தது. தலை, கண் மற்றும் தாடி முதற்கொண்டு அப்படியே கிறிஸ்துமஸ் தாத்தா போன்றே இருந்தது.

புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு என்பதால் என்னிடம் ஒரு கமெரா உள்ளது. அதை வைத்து அந்த காட்சியை நான் புகைப்படம் எடுத்தேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேகத்தில் தெரிந்த இந்த கிறிஸ்துமஸ் தாத்தா புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.