டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களை பிடித்து அஸ்வின், ஜடேஜா அசத்தல்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா 26 விக்கெட்டுகளையும், அஸ்வின் 28 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் இரண்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது மிகவும் அரிதாக நடைபெறுவதாகும்.

887 புள்ளிகளுடன் அஸ்வின் முதல் இடத்திலும், 867 புள்ளிகளுடன் ஜடேஜா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அஸ்வின் ஏற்கனவே முதல் இடத்தில் இருந்து வந்தார்.

ஆனால் இந்த தொடரில் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தரவரிசையில் பல இடங்கள் முன்னேறி உள்ளார். குறிப்பாக கடைசி டெஸ்டில் அவர் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்சில் அவர் வீழ்த்திய 7 விக்கெட்டுகள் தான் வெற்றிக்கு பெரிதும் உதவியது.