மாத்தறை – கிரிந்த Puhulwella நகரில் சிகரட் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்படும் வர்த்தகர்களே சிகரட் விற்பனை செய்வதை தடை செய்துள்ளனர்.
மேலும், பொது சுகாதார நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு இணங்கவே தாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக குறித்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயல்முறைக் காரணமாக, சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கை வாழ் பெண்கள் இதனால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இதைப் பார்த்து அக்கம் பக்கங்களில் உள்ள பிரதேசங்களிலும் சிகரட் பாவனை குறையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், மனிதர்களின் வளிமாசடையும் செயற்பாடுகளால் வருடமொன்றுக்கு இலங்கையில் 7800 பேர் மரணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.