அடுத்த வாரத்திற்குள் 10 ஆயிரம் மெற்றிக் தொன் நாடு மற்றும் சம்பா அரிசிகளை இறக்குமதி செய்து, ஒரு கிலோ அரிசியை 50 ரூபா முதல் 60 ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அரச கஞ்சியங்களில் இரண்டு இலட்சம் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை வைத்து கொண்டு, ஏனைய தொகை படிப்படியாக சந்தைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய திணைக்களம் வழங்கியுள்ள விபரங்களின்படி கடந்த பெரும் போகத்தில் கிடைத்த அறுவடை நெல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை போதுமானது.
சில நெல் ஆலை உரிமையாளர்களும், வர்த்தகர்களும் அரிசி பற்றாக்குறை நிலவுவதாக காண்பித்து விலையை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.







