இன்றைய ராசி பலன் 18.12.2016

  • மேஷம்

    மேஷம்: நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களால் உங்களுக்கு வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • கடகம்

    கடகம்: மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்க பாருங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • துலாம்

    துலாம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • தனுசு

    தனுசு: மாலை 6.00 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மாலை 6,00 மணி முதல் சந்திராஷ்டமம் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. கனவு நனவாகும் நாள்.