மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்!!

பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று லோதா தலைமையிலான கமிட்டி பல பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கியது. இதில் பெரும்பாலானவற்றை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதும் ஒன்று.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து வருகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார். இதனால் 3 அல்லது 4-ந்தேதிக்குள் அவர் அதிரடி தீர்ப்பை வழங்குவார் என்று கூறப்படுகிறது. அப்படி தீர்ப்பு வழங்கினால் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத் பவார் தனது பதவியை விட்டு விலக வேண்டும். இதனால் இன்று அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.